Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien
வணக்கம் நண்பரகளே! மீண்டும் ஒரு சுவையான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று ஒரு கதை அல்ல பல கதைகள். புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் வாழ்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை ' Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien ' தொகுத்து வழங்கி உள்ளேன். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இரயில் பயணம் ஒருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். கல்லூரி ஒன்றில் சிறப்புரையாற்ற சென்றுகொண்டிருந்தார். அந்த ரயிலில் இருந்த அனைவருக்கும் ஐன்ஸ்டீனை தெரியும். அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கையொப்பம் வாங்கவும் முயற்சி செய்தனர். இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு சில நாட்கள் முன்பே, அவருக்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் அவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவியிருந்தது. ஐன்ஸ்டின் பயணம் செய்துகொண்டு இருக்க, பயணச்சீட்டு சரிபார்க்க ஆய்வாளர் உள்ளே நுழைந்தார். அனைவரும் தங்கள் பயணச்சீட்டை காட்டிக் கொண்டிருந்தனர். ஆய்வாளரைக் கண்டதும் ஐன்ஸ்டீன் தனது சீட்டை எட...