இடுகைகள்

நீதி கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோபத்தால் என்ன இலாபம் ? | சுவராஸ்யமான தமிழ் சிறுகதை

படம்
நண்பர்களே! மீண்டும் ஒரு சுவையான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மனோவின் முயற்சி : மனோகரன் கடுமையான சினம் கொண்டவன். எவர் சொல்லுக்கும் செவிசாய்க்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று வாதம் செய்பவன். ஆனால், இன்று ஆழ்ந்த மௌனமும் பொறுமையும் கொண்டிருந்தான். அவன் இதயம் வேகமாகத் துடித்தது. பரபரப்பான சாலையில் ஏதோ ஒரு யோசனையோடு வேகமாக நடந்து கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒரு ஏக்கம் தெரிந்தது. நேராக ஒரு வீட்டின் வாசலில் நின்றான், 'குணா குணா' என்று வெளியே கத்தியபடி, உள்ளே வர அனுமதி எதிர்பார்த்து காத்திருந்தான். அந்த வீட்டின் கதவு திறந்தது. ஒரு அம்மா வெளியே வந்தார், 'நீங்கள் மனோகரன் தானே? உங்கள் நண்பர் குணாவின் மனைவி நான். அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்று உள்ளார்' என்றார். 'எப்பொழுது திரும்பி வருவார்?' என்று ஒருவித பதற்றத்தோடு கேட்டான் மனோகரன். 'அதை என்னிடம் சரியாகச் சொல்லவில்லை. அவர் வந்ததும் உங்களைக் கைபேசியில் தொடர்பு கொள்ள சொல்கிறேன்' என்றபடி வீட்டிற்குள் சென்று கதவை மூட முற்பட்டாள். ...

நீ எதை தேர்ந்தெடுக்கப் போகிறாய்? | யதார்த்தமான வாழ்க்கை சிறுகதை

படம்
ஒரு ஊரில் சமையல்காரர் ஒருவர் வசித்து வந்தார் பெயர், ராமு. அவர் சமையல் எந்த அளவுக்குச் சுவையானதோ அந்த அளவிற்கு இனிமையானவர். அந்த ஊரில் அவரை அனைவருக்கும் பிடிக்கும் அத்தகைய பண்பாளன். ராமு சிறு வயது முதலே பல கஷ்டங்களை எதிர்கொண்டான். சிறு வயதிலே தன் பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டான். நன்றாகப் படிக்கும் மாணவன் எனினும் அன்றாட தேவைக்குக் கூடப் பணம் இல்லாததால், பள்ளி படிப்பைப் பாதியிலே கைவிட்டான். தனக்கு தெரிந்த சமையலை தொழிலாக மாற்றிக் கொண்டான். தற்போது 50 வருடங்களாகக் கோவில்  மற்றும் வீட்டு விசேஷங்களுக்குச் சமைத்து பரிமாறி வருகிறான்.   அவருக்கு ஒரு பெண் குழந்தை, அமுதா வயது 20 . தனக்கு பண கஷ்டம் அவ்வப்போது இருந்தாலும், அதை என்றும் தன் மகளிடம் காட்டிக் கொண்டதில்லை. எந்தக் காரணத்தால் அவன் கல்வி தடை பட்டதோ அதே போன்ற பாதிப்பு தன் மகளுக்கு வரக் கூடாது என ஊரிலே சிறந்த பள்ளியில் படிக்க வைத்தான். அமுதாவின் புலம்பல் அமுதா மிகவும் நன்றாகப் படிப்பாள், வகுப்பில் என்றுமே முதல் மதிபெண் பெற்று தேர்ச்சி அடைவாள். அப்பாமீது அதிக அன்பு கொண்டவள் ஆனால் அவரைவிட அதிகம் படித்தவள் எனக்...

ஏமாற்றினால் ஏமாறுவாய்! | சிரிக்க சிந்திக்க - Funny Moral story

படம்
ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் இருந்தனர். நால்வரும் நெருங்கிய நண்பர்கள், எது செய்தாலும் ஒன்றாகத் தான் செய்வார்கள். கல்லூரியில் வேலை செய்யும் கணக்குப் பேராசிரியர் மூர்த்தி, வழக்கம்போலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடியும் சமயத்தில், ‘பிள்ளைகளே! நாளை ஐந்தாவது பாடத்தில் இருக்கும் 1 6 மதிப்பெண் வினா-விடைகளை படித்து வாருங்கள் ஒரு தேர்வு வைக்கப் போகிறேன்’ எனக் கூறி விட்டுச் சென்றார் மூர்த்தி. நான்கு நண்பர்களும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர், ‘என்னடா இது? இன்று இரவு நாம் புதிய 'வீடியோ கேம்' விளையாடுவதாக இருந்தோமே, அவர் நாளைத் தேர்வு வைக்கப் போவதாகச் சொல்கிறாரே’ என்றான் ஒருவன். ‘விடுடா பார்த்துக் கொள்வோம். நாம் திட்டமிட்ட படியே இன்று இரவு விளையாடத் தான் போகிறோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னடா சொல்றீங்க?’ என மற்றவர்களைக் கேட்டான் இன்னொருவன். ‘ஆமாம் -டா விளையாடுவோம்’ என மற்ற இருவரும் தலையாட்டினர். அவர்கள் பேசி வைத்த படியே இரவு விளையாடினர். பின் அனைவரும் வீடு நோக்கி நகர்ந்தனர். காலை விடிந்தது, கல்லூரிக்கு எப்பொழுதும் போல ஒன்றாகப் புறப்பட்டனர். ‘தேர்வு...

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

படம்
வணக்கம் நண்பர்களே! கதைகள் மனித வாழ்வை மேம்படுத்தும். வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகளை கூறும்  துறவி கதைகள்  இன்று பகிர்ந்துள்ளேன்... -------------------------------------------------------------------------------------------------------------------------- 1. துறவி கேட்ட கேள்வி ?! அது ஒரு அழகிய ஊர். அங்கு வயது முதிர்ந்த துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அறிவுக்கும் ஞானத்திற்கும் ஈடு அவர் மட்டுமே. ஊரில் வரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் கைத்தேர்ந்தவர்.  அவரின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்கக் கூட்டம் எப்பொழுதும் கூடிகொண்டே இருக்கும். அவரின் ஆலோசனை தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதால், கல்வி கற்காத பாமரனும் செல்வந்தர்களும் அவரைக் காண வந்த வண்ணமே இருந்தனர். அவர் அந்த ஊருக்கு வந்து 1௦ வருடங்கள் நிறைவுற்றது. அந்த ஊரின் மக்கள் அவருக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை. ஆனால், துறவிக்கு மனதில் ஒரு வருத்தம் வளர்ந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் தன்னை வந்து சந்திப்பதையும் கருத்துகளைக் கேட்பதையும் அவர் விரும்பினாலும், தங்கள் வாழ்வின் பிரச்சனைகளைக் க...

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

படம்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு மூட நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார். காலையில் அவர் யார் முகத்தைப் பார்த்து  விழிக்கிறாரோ அவரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தே அந்த நாள் அமையும் எனக் கண் மூடித் தனமாக நம்பினார். அந்த நாள் இனிய நாளாக அமையவில்லை என்றால் காலையில் யார் முகத்தில் விழித்தாரோ அவரை நாடு கடத்தி விடுவார்.  எப்பொழுதும் தான் அதிர்ஷ்டம் கொண்டவர் எனத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விழிப்பதே வழக்கம். எனினும் சில பொழுதுகளில் எவரேனும் மாட்டிக்கொள்வதுண்டு. சின்னத் தீவு அந்த நாட்டிலிருந்து கடல் தாண்டி ஒரு சின்னத் தீவு இருக்கும். அந்தத் தீவுக்குத் தான் அதிர்ஷ்டம் இல்லாதவர்களை நாடு  கடத்துவது வழக்கம். அங்குப் பல மிருகங்கள் சுற்றி திரியும். அவை நாடு கடத்த பட்ட மனிதர்களை உணவாகத் திண்று விடும்.  எந்தத் தவறும் செய்யாமல் ராஜாவின் மூட நம்பிக்கையால் இறந்தவர்கள் பலர். இப்படியே நாட்களோட அந்த நாட்டிற்கு வேலை தேடி ஒரு இளைஞன் வந்தான். ராஜாவைப் பார்க்க வேண்டுமென ஆவலோடு அரண்மனை வாயிலில் இரவு முதல் காத்திருந்தான்.  காலை விடிந்தது காவலர்கள் ரோந்து பணியில்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நெஞ்சை உருக வைக்கும் நட்பு கதை: இரண்டு நண்பர்களின் கதை | Friendship Short Story

அன்று இரவு | Story of a business girl caught at night - Mystery Thriller

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

செல்போன் அழைப்பு | நகைச்சுவை சிறுகதை

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

புதிர் கதைகள் | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? - Tamil Clever Short Story