நண்பர்களே! மீண்டும் ஒரு புதிய கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய கதை உங்களுக்காகக் காத்திருகிறது! பையுடன் பாட்டி கிட்டத்தட்ட 70 வயது இருக்கும் அந்த மூதாட்டிக்கு. கையில் தூக்கமுடியாமல் ஒரு பையைச் சுமந்து கொண்டு சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார். பை என்றால் மஞ்சள் பையையோ துணிப்பையையோ கற்பனை செய்து விடாதீர்கள், பாட்டிதான் பழசு பைப் புத்தம் புதிய விலை உயர்ந்த சூட்கேஸ். மற்றொரு கையில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தடி ஒன்று வைத்திருந்தார். பாட்டி நேராக ஒரு வழிப்போக்கனிடன் சென்றார். அவனை நிறுத்தி, 'தம்பி இங்க வலஜா வங்கி இருக்காமே. எனக்குக் கண்ணு தெரியாது. கொஞ்சம் வங்கி வாசலில் விட்டு விடுகிறாயா?' என்று கேட்டார். உதவிய இளைஞன் அவரின் நிலையைக் கண்டு மனம் இறங்கிய இளைஞன், 'இங்கே பக்கம் தான் பாட்டி அந்த வங்கி, வாருங்கள் உங்களை விட்டு விட்டுச் செல்கிறேன்' என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டே அழைத்துச் சென்றான். 'ஏன் பாட்டி வீட்டில் யாரையும் கூட அழைத்து வரலாம்ல. வங்கிக்குப் போகணும் சொல்றீங்க, கண்டிப்பா பணம் கொடுக்கல் வாங்கல் ஏதாவது இருக்கும். உங்களை யார...